தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானியை ஆணைக்குழு அனுப்பி வைக்கவில்லை

- அரச அச்சகத்திற்கு வர்த்தமானி கிடைக்கப் பெறவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான வர்த்தமானியை வெளியிடுவதற்கான அறிவித்தல், அரசாங்க அச்சகத்திற்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்ன வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் கையொப்பத்துடனான குறித்த வர்த்தமானியை அச்சிடும் பொருட்டு அரச அச்சக திணைக்களத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

PDF icon Special-Release-Election-T.pdf (69.54 KB)

PDF File: 

Add new comment

Or log in with...