சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலினால் தேர்வு செய்யப்பட்ட 2022 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் இலங்கை வீரர்கள் இடம்பெறத் தவறியுள்ளனர்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டின் டி20 அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க இணைக்கப்பட்ட நிலையில் நேற்று (24) ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சோபித்த வீரர்களை உள்ளடக்கியே ஐ.சி.சி இந்த அணிகளை அறிவித்துள்ளன.
இதில் ஒருநாள் அணிக்கு பாகிஸ்தானின் பாபர் அசாம் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பதோடு டெஸ்ட் அணிக்கு இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டொக் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி ஒருநாள் அணி: பாபர் அஸாம் (தலைவர்), ட்ரவிஸ் ஹெட், ஷை ஹோப், ஷ்ரேயஸ் ஐயர், டொம் லதம் (வி.கா.), சிகந்தர் ராசா, மஹிதி ஹசன் மிராஸ், அல்சரி ஜோசப், மொஹமட் சிராஜ், ட்ரெட் போல்ட், அடம் சம்பா.
ஐ.சி.சி டெஸ்ட் அணி: பென் ஸ்டொக் (தலைவர்), உஸ்மான் க்வாஜா, கிரேக் பிரத்வெயிட், மார்னுஸ் லபுஸ்சன், பாபர் அசாம், ஜொன்னி பெஸ்டோ, ரிஷாப் பான்ட், பட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, நதம் லியோன், ஜேம்ஸ் அன்டர்சன்.
Add new comment