இந்தியாவிடம் தோற்று இலங்கை வெளியேற்றம்

19 வயதுக்கு உட்பட்ட மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவிடம் 7 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்த இலங்கை அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் இந்தத் தொடரில் சுப்பர் 6 சுற்றில் தனது முதல் போட்டியாக கடந்த ஞாயிறன்று (22) இந்திய அணியை சந்தித்த இலங்கை இளையோர் மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது.

எனினும் இலங்கை அணி 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 59 ஓட்டங்களையே பெற்றது. அணித் தலைவி விஷ்மி குணரத்ன மாத்திரம் 25 ஓட்டங்களை பெற ஏழு வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்தையே பெற்றனர்.

பதிலெடுத்தாடிய இந்திய அணி 7.2 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 60 ஓட்டங்களை எட்டியது.

புள்ளிப்பட்டியலில் எந்தப் புள்ளியையும் பெறாது 5ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணிக்கு மேலும் தென்னாபிரிக்காவுக்கு எதிரான குழு நிலை போட்டி மாத்திரமே எஞ்சியிருக்கும் நிலையில் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.


Add new comment

Or log in with...