கிண்ணம், பணப்பரிசு, கார் அவர் வசமானது
பிக்பொஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வின் வெற்றியாளராக அஸீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் வெற்றிக்கிண்ணத்தையும், பரிசுப் பணம் மற்றும் பெறுமதியான காரையும் தட்டிச் சென்றுள்ளார். 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பொஸ் நிகழ்ச்சி, நேற்று 106ஆவது நாளில் முடிவு பெற்றது. இதில் மூன்று போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு தெரிவானர்.
இதில் ஷிவின் இரண்டாவது ரன்னராக வந்த நிலையில், விக்ரமன் முதல் ரன்னராக வந்துள்ளார். அஸீம் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு, கிண்ணத்தையும் வென்றார்.
மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் பதக்கங்கள் கொடுக்கப்பட்டன.
இந்த பிக்பொஸ் சீசன் 6ல் அனைத்து நிகழ்வுகளுமே மிகவும் வித்தியாசமாக நடைபெற்றதுடன், வெற்றி மேடையில் மூன்று போட்டியாளர்களையும் பிக்பொஸ் கொண்டு வந்து நிறுத்தினார்.
வெற்றியை அறிக்க கமலின் தாமதம், போட்டியாளர்கள் இருவரின் இதயத்துடிப்பை தாறுமாறாக எகிறச் செய்துள்ளது. முதல் இடத்தைப்பிடித்து வெற்றி பெற்ற அஸீமிற்கு 50 இலட்சம் இந்திய ரூபாய் பணம் மற்றும் கார் மற்றும் பிக்பொஸ் கிண்ணம் ஆகியன கொடுக்கப்பட்டன.
இந்த சீசனில் கமல்ஹாசன் உள்ளே இருந்த 3 போட்டியாளர்கள் தனது கைப்பட எழுதிய கடிதத்தினை பிரேம் போட்டு போட்டியாளர்களுக்கு தனது பரிசாக கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது
Add new comment