பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கட்டடத்திற்குள் நுழைந்தது எவ்வாறு?

உண்மையைக் கண்டறியுமாறு ஆணைக்குழு அங்கத்தவர்கள் முறைப்பாடு

 

சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் என தெரிவிக்கும் தரப்பினர் பொது பயன்பாட்டு ஆணைக்குழு அமைந்துள்ள கட்டடத்திற்குள் எவ்வாறு பிரவேசித்தனர் என்றும் அதன்போது  ஆணைக்குழுவின் அதிகாரிகள் அங்கு உள்ளனர் என எவ்வாறு அவர்கள் தெரிந்துகொண்டனர் என்பதை ஆராயுமாறு ஆணைக்குழுவின் அங்கத்தினர்கள் இருவர் நிதியமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் பிரதித்தலைவர் உதேனி விக்கிரமசிங்க மற்றும் அதன் உறுப்பினரான பேராசிரியர் மொஹான் சமரநாயக்க ஆகியோரே மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் என தெரிவிக்கும் தரப்பினர் தமக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக இந்த இரு உறுப்பினர்களும் கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டி சென். மைக்கல் வீதியில் அமைந்துள்ள மேற்படி கட்டடத்திற்குள் சிலர் பிரவேசித்து பொது பயன்பாட்டு ஆணைக்குழு மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கேள்வியெழுப்பினதுடன் அச்சுறுத்தலையும் மேற்கொண்டுள்ளனர்.

அந்த சமயம் சில ஊடகவியலாளர்களும்கூட அவர்கள் அச்சுறுத்தல் செய்த விதத்தை நேரில் கண்டனர் என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் தாம் அங்கு வருவது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர்.

அவ்வாறானால் அந்தத் தகவல் சிவில் செயற்பாட்டாளர்கள் எனத் தெரிவிக்கும் தரப்பினருக்கு எவ்வாறு சென்றது? அவர்கள் ஊடகவியலாளர்களையும் அழைத்துக்ெகாண்டு அங்கு எவ்வாறு பிரவேசித்தனர் என்பதை ஆராயுமாறு ,முறைப்பாட்டாளர்கள் முறைப்பாட்டை செய்துள்ளனர்.

உடனடியாக அதுதொடர்பில் விசாரணைசெய்து உண்மைநிலையை கண்டறியுமாறு அந்த உறுப்பினர்கள் இருவரும் பொலிஸாருக்கும் நிதியமைச்சுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...