Azend Technologies யினால் ஆரம்பிக்கப்பட்ட Careers360

- இலங்கையில் டிஜிட்டல் ஆட்சேர்ப்பில் புரட்சி

இலங்கையின் சமீபத்திய மற்றும் மிகவும் புத்தாக்கம் கொண்ட வேலை தேடும் தளமான Careers360 ஆனது அதன் ஒன்லைன் தளத்தை பொதுமக்களுக்காக வெளியிட்டுள்ளது. புதிய தொழில்கள் மற்றும் புதிய விண்ணப்பதாரர்களைக் கண்டறிவதற்கான வெளிப்படைத்தன்மை கொண்ட, பயன்படுத்த எளிதான வகையிலான அம்சங்கள் மூலம், வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை வழங்குனர்களை இணைக்கும் வகையில் Azend Technologies (Pvt) Ltd நிறுவனத்தால் இத்தளமானது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் உலகளாவிய தளங்களுக்கு இணையாக இலகுரக, புத்தாக்கமான, பயன்படுத்த எளிதான இணையத்தளத்தை உருவாக்குவதில் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.

Careers360.lk ஆனது உலகளாவிய ஆட்சேர்ப்பு பிரிவில் உள்ள சமீபத்திய அம்சங்களை , குறிப்பாக சுயவிபரப் பொருத்தம் முதல் பகுப்பாய்வு சார்ந்த ஆட்சேர்ப்பு வரையான அம்சங்களை, பாரம்பரிய இலங்கைத் தொழில் சந்தைக்கு கொண்டு வருவதன் மூலம் அதற்கொரு புதிய முகத்தை வழங்குகிறது. இத்தளமானது, தனிப்பட்ட தொழில் விளம்பரங்கள், செலவு குறைந்த பாரிய அளவிலான பணியமர்த்தல் தெரிவைத் தேடும் பெரு நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொகுப்பு பொதிகளை வழங்குகிறது.

இந்த தளத்தின் மூலம், வேலை தேடுபவர்களுக்கு (புதிய பட்டதாரிகள், நிர்வாகிகள், சிரேஷ்ட முகாமையாளர்கள் வரை) இலங்கையின் பாரம்பரிய வேலை தேடும் தொழிலுக்கு மாற்றீடான வகையில் ஊடாடல் அம்சத்தை வழங்குகிறது. வேலை தேடுபவர்கள் தங்களது சுயவிபரங்களை உருவாக்கலாம், அவர்களின் சமீபத்திய தொழில் அனுபவங்கள், திறமைகளை அவற்றுடன் இணைத்து புதுப்பிக்கலாம் என்பதுடன் வெற்றிடமான பதவிகளுக்கு நேரடியாக விண்ணப்பங்களை மேற்கொள்ளலாம். அது தவிர, சாத்தியமான ஆட்சேர்ப்பை மேற்கொள்பவர்களால் நேரடியாக அணுகக் கூடிய, Careers360 இனது headhunting அம்சமும் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படுகின்றது.

வேலைக்கான விண்ணப்பங்கள் தவிர, தொழில்துறை நிபுணர்களின் தொழில் வழிகாட்டல், திறன் மேம்பாடு, வேலை தேடுவதில் சிறந்து விளங்குவதற்கான உதவிக்குறிப்புகள், மற்றும் தொழில் நுண்ணறிவுத் தகவல்கள் உள்ளிட்டவற்றை பிரத்தியேக (Careers360LK) YouTube பக்கம் மூலம் பெறலாம். இவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பெற, வேலை தேடுபவர்கள் www.careers360.lk/sign-up எனும் இணையத்தள முகவரி ஊடாக எந்தவொரு கட்டணமும் இன்றி தங்களை பதிவு செய்யலாம்.

Azend Technologies இன் CEO, ரஜீவ் சில்வா இந்த புதிய தளம் தொடர்பான தனது கருத்துகளை பகிர்ந்து கொண்ட போது, “கொவிட் தொற்றுநோய் காரணமாக அதிக கவனம் செலுத்தப்படும் ஒரு சிக்கலை Careers360 தளம் நிவர்த்தி செய்கிறது. இது தொழில் வழங்குனர்கள் தங்களது வளர்ந்து வரும் வணிகங்களுக்கு சரியாக பொருந்தக் கூடியவர்களை, உரிய வகையில் அடையாளம் காண்பதில் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். வேலை தேடுபவர்கள், குறுகிய கால தொழில்களுக்கு பதிலாக நீண்ட கால தொழிலை பெறுவதில் நாட்டம் கொண்டுள்ளனர். இத்தகைய பிரச்சினைகளுக்கான சிறந்த தீர்வு Careers360 ஆகும். இது பயனர் நட்புடையது, சிக்கனமானது, சரியான விண்ணப்பதாரர்களை சரியான தொழில் வழங்குனர்களுடன் இணைப்பதில் மிகவும் சிறப்பாக செயற்படுகிறது. Careers360 ஆனது, விண்ணப்பதாரர்களுக்கு நீண்ட கால தொழில்களை வழங்குவதற்கும், சிறந்த திறமையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பை தொழில் வழங்குனருக்கும் வழங்குவதற்கு உதவும் ஆற்றலைக் கொண்டுள்ளது.

இந்த புத்தாக்கம் கொண்ட தளமானது, தொழில் வழங்குனர்களுக்கு ஒரே தளத்தில் விளம்பரங்கள் மற்றும் விண்ணப்பங்களைக் கண்டறிந்து நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த தனி மூலாதாரத்தை வழங்குகிறது. தொழில் வழங்குனர்கள் தற்போது, ​​உலகளாவிய ஆட்சேர்ப்பு தளங்களில் காணப்படும், headhunting, profile matching, pre-screening questions (உயர் அதிகாரிகளை தேடல், சுயவிபரப் பொருத்தம், முன் கூட்டியதான கேள்விகள்) போன்ற சில அம்சங்களை இதில் காணலாம். அது மாத்திரமன்றி Careers360 தரவு பகுப்பாய்வுக் கருவிகளைப் பயன்படுத்தி, தொழில்வழங்குனர்களுக்கு தங்களது விளம்பரங்களை தங்களது தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளும் மிகச் சிறந்த முறைகளை அறிவதற்கான தரவுகளையும் வழங்குகிறது.

ஒன்லைன் பாடநெறி வழங்குநர்கள், கணனி கற்பிப்பு, blockchain அடிப்படையிலான அம்சங்கள் மூலம் ஆட்சேர்ப்பில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்காக, இத்தளத்துடன் இணையும் உறுப்பினர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிப்பது போன்ற புதிய புத்தாக்க விடயங்களின் தொடர்ச்சியான அறிமுகத்திற்கான கதவுகளைத் திறக்கின்ற, ஒரு அளவிடக்கூடிய தளமாக Careers360 விளங்குவதன் மூலம், இலங்கை டிஜிட்டல் ஆட்சேர்ப்பில் புரட்சியை ஏற்படுத்துகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்தில் இது 100 இற்கும் மேற்பட்ட தொழில் வழங்குனர்களுடன், எதிர்காலத்திற்கான அற்புதமான பொதிகளை வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், பயனர்கள் MacBooks முதல் iPhone வரை அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் பெறுகின்றனர்!
Careers360 நிறுவனமானது அண்மையில் இடம்பெற்ற தேசிய  ICT Awards – NBQSA 2022 நிகழ்வில், தொழில்சார் சேவைகளுக்கான பிரிவில் வெண்கல விருதினை வென்றது. Careers360 அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியில் தேசிய அங்கீகாரத்தை பெற்றுக் கொண்டுள்ளமையானது, உலகளாவிய ஆட்சேர்ப்பு துறையில் காணப்படும் நவீன அம்சங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையின் பாரம்பரிய தொழில் சந்தைக்கு புதிய, புத்தாக்கமான முகத்தை வழங்கும் இந் நிறுவனத்தின் திறனுக்கான சான்றாகும்.

மேலதிக தகவலுக்கு www.careers360.lk தளத்தைப் பார்வையிடவும் அல்லது 0727 360 360 இற்கு அழைப்பை ஏற்படுத்தவும்.


Add new comment

Or log in with...