- ஏ.எச்.எம். பெளசிக்கு மீண்டும் எம்.பியாகும் வாய்ப்பு
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (20) பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் பொருட்டு அவர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக இதன்போது தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நிறைவேற்றுக் குழு அண்மையில் கூடி இம்முடிவை எடுத்துள்ளதாகவும், அதற்கமைய இம்முடிவை தாம் எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஐ.ம.ச. கட்சி சார்பில் போட்டியிட்டு தெரிவானவர்கள் பட்டியலில் அடுத்த இடத்திலுள்ள எம்.எச்.எம். பௌசி மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment