புலம்பெயர் கலைஞர்களின் படைப்பில் ஆஸியில் 'பொய்மான்' திரைப்படம்!

அவுஸ்திரேலிய மண்ணில் ஷோபனம் கிரியேஷன்ஸ் கலைஞர்களால் உருவாகியுள்ள 'பொய்மான்' திரைப்படம், தமிழ்க் கலைஞர்களின் அரியதொரு படைப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. கங்காரு தேச தமிழ் சினிமா படைப்பாற்றலில் இத்திரைப்படம் ஓர் மைல்கல்லாக தடம் பதிக்கும் என்றும் எதிர்வு கூறலாம்.

அவுஸ்திரேலிய மண்ணில் உருவாகிய 'பொய்மான்' விரைவில் அவுஸ்திரேலிய திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் திரைப்படமாகும். இவ் முழுநீள திரைப்படத்தில் ஜனார்தன், கவிஜா, ஜெயமோகன், ஷர்மினி நடித்துள்ளனர். ஷோபனம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் புற்றுநோய் மருத்துவராகவும், மேடை நாடகம், குறும்பட இயக்குனாராகவும் நன்கு அறியப்படும் மருத்துவர் ஜெயமோகன் முழுநேர திரைப்பட இயக்குனாராக அறிமுகமாகிறார்.

புலம்பெயர் இளங் கலைஞர்களின் படைப்பாற்றலில் அவுஸ்திரேலியாவில் உருவாகிய 'பொய்மான்' திரைப்படம் தமிழ் சினிமா உலகில் ஓர் வரலாற்றுச் சாதனை படைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தை ஒரு கப்புசினோ காதல் மற்றும் பூமராங் போன்ற பாராட்டப்பட்ட குறும்படங்களையும் இயக்கிய டொக்டர் ஜே. ஜெயமோகன் எழுதி இயக்கியுள்ளார். இயக்குனர் ஜெயமோகனின் இரண்டு குறும்படங்களும் உலகளவில் 50,000க்கும் அதிகமான பார்வைகளுடன் பலத்த பாராட்டுக்களையும் பெற்றுள்ளன.

பொய் மான் திரைப்படத்தின் எடிட்டிங்கை செந்தில்குமார் ஆர் மற்றும் ஹரிஷ் செய்துள்ளனர்.

கலை இயக்கம் பணியை ஷாமினின் சி ஆற்றியுள்ளனர்.

இத்திரை இசை பாடல்களின் வரிகளை பாரதியார், குவேந்திரன், ஜெயமோகன், ஆதி எழுதியுள்ளனர். பொய்மான் படத்தின் இசையை சாரு ராம், ஆதி, குரு பி ஆகியோர் மெருகூட்டியுள்ளனர். பலத்த எதிர் பார்ப்புகளுடன் வெளிவரும் பொய்மான் பாடல்களை கலைமாமணி பூஷணி கல்யாணராமன், கிரே , ஆர்.பி ஷ்ரவன் (சூப்பர் சிங்கர்), ஆதி ஆகிய பாடகர்கள் பாடியுள்ளனர்.

அவுஸ்திரேலிய தயாரிப்பான 'பொய்மான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீடு கடந்த (11) புதன்கிழமை யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக நடைபெற்றது.

ஜெயமோகன் இயக்கிய 'பொய்மான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பிரபல கலைஞர்களுடன் நடைபெற்றுள்ளது. புலம்பெயர்ந்த இளங் கலைஞர்களை உள்ளடக்கிய முழு நீளத் திரைப்படமான பொய்மான், இந்திய திரைப்படங்களைப் போன்ற தொழில்நுட்ப உபகரணங்களை இணைத்து இலங்கை, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளதும் பாராட்டத்தக்கதே.

இப்படம் வெளிநாடுகளில் இம்மாத இறுதியிலும், அடுத்த மாத தொடக்கத்தில் இலங்கையிலும் வெளியாகவுள்ளது.

அவுஸ்திரேலிய மண்ணில் உருவாகிய 'பொய்மான்' திரைப்படம் சாதனை படைக்குமா என்பதனை காலம் பதில் சொல்லும்.

ஐங்கரன் விக்கினேஸ்வரா...?


Add new comment

Or log in with...