- சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் 5 பேர் கைது
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து, ஒளிபரப்பை நிறுத்திய சம்பவம் தொடர்பில், கண்டியைச் சேர்ந்த 44 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஜூலை 13ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (10) பிற்பகல், கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கறுவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரை இன்றையதினம் (11) கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கறுவாத்தோட்டம் பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதோடு, இது தொடர்பில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Add new comment