'இலக்கிய வித்தகர்' விருது பெற்றார் சம்மாந்துறை மஷுறா சுஹுறுதீன்

கிழக்கு மாகாண 'இலக்கிய வித்தகர் விருது' பெற்றார் இலக்கிய ஆளுமை சம்மாந்துறை மஷுறா சுஹுறுதீன். ழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்திய 2021ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கிய விழா அண்மையில் திருகோணமலை விவேகானந்தா கல்லூரியில் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி எஸ்.சரண்யாவின் நெறிப்படுத்தலில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இவருக்கான விருதை வழங்கி கௌரவித்தார்.

மஷுறா சுஹுறுதீன் சம்மாந்துறையைச் சேர்ந்த அப்துல் மஜீத்_சுபைதா தம்பதியின் புதல்வியாவார். அவர் சம்மாந்தறை முஸ்லிம் மத்திய கல்லுரியில் கற்றுள்ளார். சமாதான நீதவானாகிய இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். சிறுவயதிலேயே கலை, இலக்கியத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராவார்.

1979ஆம் ஆண்டு பாடசாலைக் காலத்திலேயே கலை, இலக்கியப் பணியை ஆரம்பித்தவர்.இன்றும் கலை.இலக்கியப் பணியைத் தொடர்கின்றார். கவிதை,கதை, கட்டுரை,நாடகம், வில்லுப் பாட்டு, சித்திரம், கைப்பணி என்பவற்றை படைப்பதில் மிகவும் ஆர்வமாகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசியப் பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளதுடன் மின் இதழ் சஞ்சிகைகளிலும் வெளியாகியுள்ளன.

இலக்கியத்திற்காக இவர் பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். சாரணியம்,சென்ஜோன்ஸ் அம்பியூலன்ஸ் முதலுதவிப் பிரிவிலும் பணியாற்றி வருகின்றார்.

பி.எம்.எம்.ஏ. காதர்...

(மருதமுனை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...