சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமை தொடர்பில், கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்திடம் உரிய அறிக்கைகளை பெறுமாறு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சரின் பிரஜாவுரிமை தொடர்பான வழக்கு இன்று (05) கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கைகளை விரைவாக பெற்று விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டுள்ளது.
சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தி, சிவில் செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, அவர் பிரித்தானிய குடியுரிமையை கொண்டுள்ளதாகவும் அரசியலமைப்புக்கு அமைய, அவர் இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு குறித்த மனுவில் ஓஷல ஹேரத் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment