கொரோனாவின் புதிய வகை திரிபுகளால் மீண்டும் அலை உருவாகுமென அச்சம்!

சீனாவில் உருவெடுத்துள்ள புதிய கொரோனா அலை காரணமாக புதிய வகை கொரோனாக்கள் உருவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சீனாவில் மிக வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. சீனா தற்போது நாளாந்தம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்ைக விபரங்களை வெளியிடுவதை நிறுத்து விட்டது. அந்நாட்டில் மில்லியன்கணக்கான மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.

ஒமிக்​ேரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா திரிபு வைரஸ் தொற்று அங்கு பரவி வருகின்றது. இந்த நிலையில் சீனாவில் பரவும் இந்த திரிபினால் புதிய வகை கொரோனா உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

ஒரு வகையான கொரோனா இன்னொரு வகையாக உருமாற்றம் அடைந்து முன்பை விட ஆபத்து அதிகமானதாகவோ, ஆபத்து குறைவானதாகவோ மாறி மக்களிடையே பரவி வருகிறது. கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே அது பல்வேறு வகைகளாக உருமாறிக் கொண்டுதான் இருக்கிறது. ஏற்கனவே அல்பா, பீற்றா, காமா, டெல்டா என்று பல வகை கொரோனா திரிபுகள் உள்ளன. அந்த வகையில்தான் தற்போது ஓமிக்​ேரான் பரவி வருகிறது. சீனாவில் பரவுவது ஒமிக்​ேரான் வைரஸ்தான். ஆனால் ஒமிக்​ேரானிலேயே இலேசாக மாற்றம் அடைந்த கிளை வகையான BA5.2 மற்றும் BF.7 ஆகியனவே சீனாவில் அதிகமாக பரவி வருகின்றன. சீனாவில் மட்டும் ஒமிக்ேரானின் 130 வகையான கிளை வைரஸ்கள் பரவி வருகின்றன.

இவ்வாறு கிளை வைரஸ்கள் அதிகம் பரவப் பரவ அவை புதிய ஒரு அலையை உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. புதிய வகை கொரோனா உருவெடுக்கும் அபாயம் உள்ளதால் மக்கள் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியமாகின்றது.

இந்தியாவில் 6 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா ஏற்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் நவம்பர் மாதத்திற்கு முன்பே குணமடைந்து விட்டனர். இந்தியாவில் 24 மணி நேரத்தில் 196 பேர் புதிதாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் புதிய வகை உருவானால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதாவது இந்தியாவில் இதுவரை பரவாத அல்லது உலகில் இதுவரை பரவாத ஒரு வகை கொரோனாவை உருவாக்கினால் அது மீண்டும் புதிய அலையை உருவாக்கும் அபாயம் உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...