கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கர வண்டியுடன் கார் மோதிய விபத்தில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை (10) காலை, கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதி, கார்கில்ஸ் வங்கிக்கு முன்னால் உள்ள வீதியில், பம்பலப்பிட்டி திசையிலிருந்து காலி முகத்திடல் திசை நோக்கி பயணித்த கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி மோதியதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளான காரின் சாரதி அன்றைய தினம் 9.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்தது.
சந்தேகநபர் தொடர்பில் விசாரணை குழுவினால் நீதிமன்றில் பயணத்தடை உத்தரவைப் பெற்றிருந்த நிலையில், சந்தேகநபர் நேற்றிரவு (12) வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
சந்தேகநபர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் என்பதோடு, சந்தேகநபர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
Add new comment