ஜெனின் நகரில் இடம்பெற்ற சுற்றிவளைப்புத் தேடுதலின்போது இஸ்ரேலிய படையினரால் நேற்று (08) மூன்று பலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் கடந்த சில மாதங்களாக தினசரி நடத்திவரும் தேடுதல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தேடுதலின்போது குறைந்தது இரு பலஸ்தீனர்கள் காயத்திற்கு உள்ளாகி இருப்பதோடு ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜெனின் நிர்வாகப் பகுதியில் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதோடு பாடசாலைகள், வர்த்தகங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டுள்ளன.
2022இல் கிழக்கு ஜெரூசலம், மேற்குக் கரை மற்றும் முற்றுகையில் உள்ள காசா பகுதிகளில் இஸ்ரேலினால் 50க்கும் அதிகமான சிறுவர்கள் உட்பட 200க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தக் காலப்பகுதியில் 25க்கும் அதிகமான இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளனர்.
Add new comment