நான்கு பற்களை இழந்தார் சாமிக்க

லங்கா பிரீமியர் லீக் தொடரில் கோல் கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிராக கடந்த புதன்கிழமை நடைபெற்ற போட்டியின்போது ஏற்பட்ட காயத்தில் கண்டி பல்கோன்ஸ் அணியின் சாமிக்க கருணாரத்னவின் நான்கு பற்கள் உடைந்துள்ளன.

பிடியெடுப்பு முயற்சியின்போது பந்து அவரது முகத்தில் மோதியதிலேயே காயம் ஏற்பட்டது. காலோஸ் பிரத்வெயிட் வீசிய இன்னிங்ஸின் நான்காவது ஓவரின் முதல் பந்தில் நுவனிது பெர்னாண்டோ உயர அடித்த நிலையில், அதனை பிடிக்கச் சென்றபோதே சாமிக்க காயமடைந்தார். எவ்வாறாயினும் அவர் அந்த பிடியெடுப்பை செய்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து காலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சத்திர கிசிக்சை இடம்பெற்றுள்ளது.

அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும் கண்டி அணியின் எதிர்கால போட்டிகளில் இடம்பெறுவார் என்றும் கண்டி பல்கோன்ஸ் அணி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். கோல் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் கண்டி அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. இந்த வெற்றியோடு கண்டி அணி தனது முதல் இரு போட்டிகளிலும் வெற்றியீட்டி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது.


Add new comment

Or log in with...