நாமலுக்கு எதிரான வழக்கு மே மாதம் 11 இற்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை நிறுவனமொன்றில் முதலீடு செய்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு நேற்று வியாழக்கிழமை (08) கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.

இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம், சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், சட்டமா அதிபருக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்துக்கு அறிவித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

 

 


Add new comment

Or log in with...