துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய விரைவில் வாய்ப்பு

சபையில் திலும் அமுனுகம தெரிவிப்பு

 

கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு விரைவில் வழங்கப்படுமென முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரண்டு கட்டங்களாக முதலீட்டுக்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், தற்காலிக  வர்த்தகங்களை மேற்கொள்ளவும் உணவகங்கள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்களை முன்னெடுக்கவும் முதற்கட்டமாக வாய்ப்புகள் வழங்கப்படுவதுடன் பின்னர் பாரிய முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வாய்ப்புகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு ஆகியவற்றிற்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கவுள்ள முதலீட்டு நடவடிக்கைகள் தொடர்பில் சபையில் தெளிவுபடுத்திய அவர் திருகோணமலையில் சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...