- ஒன்லைன் மூலம் மாத்திரம்; டிசம்பர் 20 இறுதித் திகதி
அண்மையில் வெளியிடப்பட்ட 2021 கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் இன்று (08) முதல் ஒன்லைன் மூலம் கோரப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இணையத்தளத்திற்குச் சென்று அல்லது DoE எனும் செயலி ஊடாக அல்லது onlineexams.gov.lk/eic எனும் தளம் ஊடாக இதற்காக விண்ணப்பிக்க முடியுமென, திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கான விண்ணப்பம் டிசம்பர் 20 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பில் ஏதேனும் தகவல் அவசியமாயின் பின்வரும் இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளவும்:
- பாடசாலை பரீட்சைகள் (மதிப்பீடு) கிளை - 011-2785231/ 011-2785216/ 011-2784037
- உடனடி அழைப்பு - 1911
Add new comment