மத்திய கொலம்பியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் நிலச்சரிவால் ஒரு பஸ் வண்டி மற்றும் இரு வாகனங்கள் புதையுண்டதில் குறைந்தது 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடும் மழையைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களில் எட்டு சிறுவர்களும் இருப்பதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளையும் பஸ்ஸில் இருந்து காப்பற்றிய நிலையில் மண்ணில் புதையுண்டு உயிரிழந்துள்ளார். கார் விபத்து ஒன்றினால் தொடர்ந்து முன்னேற முடியாத நிலையில் வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ், ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றே இந்த நிலச்சரிவில் சிக்கியதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Add new comment