வரவு செலவு திட்டம் 2023
நிதி அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான வாக்கெடுப்பு, நாளை (08) இடம்பெறவுள்ளது.
அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் (மூன்றாவது வாசிப்பு) நாளை மாலை நிறைவுற்றதும், மாலை 5.00 மணிக்கு
வாக்கெடுப்பை நடத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ், ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட 2022.12.03ஆம் திகதிய 2308/62 இலக்க வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளையைப் பாராளுமன்றத்தின் அனுமதிக்காக அன்றைய தினம் (08ஆம் திகதி) சமர்ப்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் (05) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்,இதுபற்றி தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார்.
Add new comment