தமிழ், சிங்களத்தில் Domain Name: Dot இலங்கை, Dot ලංකා

- இணையத்தளத்தில் முதல் முறையாக
- லேக்ஹவுஸ் முதலாவதாக இணைவு

இந்நாட்டின் இணையதள வரலாற்றிலேயே விசேட மைல் கல்லாக அடையாளப்படுத்தி வர்த்தக நாமத்தை (Domain Name) தமிழ் மொழியில் Dot இலங்கை (.இலங்கை) மற்றும் சிங்கள மொழியில் (Dot Lanka (.ලංකා) என்பதை பெற்றுக் கொள்ள முடியும்.

இந்நாட்டின் மிகப்பெரிய ஊடக நிறுவனமான லேக் ஹவுஸ் நிறுவனம் இந்நாட்டின் ஊடக நிறுவனங்களிடையே விசேட இடத்தை பெற்று இந்த தொழில்நுட்பத்துடன் இணைந்து கொண்டது. அதன்படி லேக்ஹவுஸ் நிறுவனம் தனது இணைய வெளியீடுகளுக்கு உரிய Domain பெயரை சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பின்வரும் வகையில் முன்வைத்துள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் ஈமெயில் Domain பெயர்களும் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதோடு Domain பெயரின் கீழ் சிங்கள மற்றும் தமிழ் மொழியில் ஈமெயில் விலாசங்களையும் எதிர்காலத்தில் பெற்றுக் கொள்ள முடியுமென கொழும்பு பல்கலைக்கழக கணினி பாடசாலையுடன் (UCSC) இணைந்த தீக்ஸன நிறுவனத்தின் பிரதம செயலதிகாரி, ஹர்ஷ விஜயவர்தன தெரிவித்தார்.


Add new comment

Or log in with...