சீன விண்வெளி வீரர்கள் மூவர் பூமிக்கு திரும்பினர்

ஆறு மாதங்களாக சீன விண்வெளி நிலையத்தில் தங்கி பணிகளை மேற்கொண்டு வந்த அந்நாட்டின் 3 விண்வெளி வீரர்களும் ஷென்சோ–14 விண்கலத்தில் பூமிக்கு திரும்பினர்.

விண்வெளியில் டியாங்காங் ஆராய்ச்சி நிலையம் கட்டமைப்பதற்காக சீனா சுழற்சி முறையில் விண்வெளி வீரர்களை அனுப்பி வருகிறது.

அதன்படி, இறுதிக் கட்ட பணிகளுக்காக 3 பேர் சில தினங்களுக்கு முன்பு விண்வெளி நிலையம் சென்றதை அடுத்து, ஏற்கனவே அங்கு தங்கி பணிகளை மேற்கொண்டு வந்த ஒரு வீராங்கனை உள்ளிட்ட 3 விண்வெளி வீரர்களும் இன்னர் மங்கோலியா பிராந்தியத்தில் பத்திரமாக தரையிறங்கினர்.

சோவியட் ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்து விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பிய மற்றும் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்த மூன்றாவது நாடு சீனாவாகும்.


Add new comment

Or log in with...