பாடசாலை மெய்வல்லுனர்; மேலும் ஆறு சாதனைகள்

கொழும்பு சுகததாச அரங்கில் நடைபெற்றுவரும் பாடசாலை மெய்வல்லுனர் சம்பியன்சிப்் போட்டியில் மூன்றாவது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) மேலும் ஆறு போட்டி சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன.

இம்முறை போட்டியில் அதிக அவதானத்தை பெற்ற வீரரான இசுரு கெளசல்ய 20 வயதுக்கு உட்பட்ட 200 மீற்றர் ஓட்டப்போட்டியை 21.47 விநாடிகளில் முடித்து புதிய சாதனை படைத்தார்.

20வயதுக்கு உட்பட்ட 110 மீற்றர் தடைதாண்டி ஓட்டப்போட்டியில் பங்கேற்ற கொழும்பு றோயல் கல்லூரி வீரர் நதுன் பண்டார 13.82 விநாடியில் போட்டித் தூரத்தை முடித்து சாதனை படைத்தார்.

அதேபோன்று பெண்களுக்கான 100 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தலைமையிலான ஏ ரத்நாயக மகா வித்தியாலய அணி புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது. இதன்மூலம் இம்முறை போட்டிகளில் ஹெட்ரிக் தங்கப் பதக்கம் வென்று தருஷி கருணாரத்ன சாதனை படைத்துள்ளார்.

இந்தப் போட்டிகளில் மேல் மாகாணம் 651 புள்ளிகளுடன் வலுவான முன்னிலையில் இருப்பதோடு 231 புள்ளிகளைப் பெற்றிருக்கும் வடமேல் மாகாணம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

பாடசாலை மெய்வல்லுனர் சம்பியன்சிப்் போட்டி இன்றுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...