எடிசன் திரை விருது பட்டியலில் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா உட்பட முன்னணி நடிகைகள் பலர்

தற்போது சமூக வலைதளங்களில் அதிகப்படியாக பேசப்பட்டு உலகத் தமிழர்களின் வாக்குகளை குவித்து வரும் தமிழ்த் திரை உலகினர்களின் முதல் தரவரிசை பட்டியலில் சிறந்த நடிகைகளில் வரிசையில் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ், காயத்ரி, சாய் பல்லவி, பிரகிடா ஆகியோர் உள்ளனர்.

இரண்டாம் தர வரிசையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகைகள் வரிசையில் சமந்தா, திரிஷா, பூஜா ஹெக்டே, ஸ்ரீநிதி செட்டி, மாளவிகா மோகனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

நவம்பர் 20ஆம் திகதி முதல் பல்வேறு நாடுகளில் உள்ள தினசரி நாளிதழ்கள், பண்பலைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள், வலையொலிகள், அதிகமாக பகிரப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் தங்களுக்கு பிடித்தமான நடிகைகளை edisonawards.in என்ற இணையத்திலும் எடிசன் அவார்ட்ஸ் செயலிலும் மற்றும் பல்வேறு சமூக ஊடகங்களின் மூலம் ரசிகர்கள் வாக்களித்து வருகின்றனர்.

எடிசன் விருது குழு இணையத்தில் வாக்குகளை பற்றி ஆராயும்போது மேற்கத்தேய நாடுகள், ஆசிய பசிபிக் நாடுகள், ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் அதிகமாக வாக்களித்து இருப்பது தெரியவருகிறது.

எடிசன் அவார்ட்ஸ் இணையத்திலும் செயலிலும் மற்றும் சமூக ஊடகங்களின் பார்வையாளர்களில் சுமார் 35 சதவீதம் வாக்களித்துள்ளனர். முந்திய காலங்களில் விட அதிகப்படியான வாக்குகளை பெற வாய்ப்புள்ளது என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் மற்றும் எடிசன் இயக்குனர் மலேசியா தீனா ஆகியோர் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...