இரு மீனவ குழுக்களிடையே மோதல்; மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

- வைத்தியசாலைக்கு தெரிவிக்காமல் இருவர் தலைமறைவு

திருகோணமலை, கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் இரு மீனவர் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூவர் வெட்டுக் காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த மோதலில் காலி, அம்பலாங்கொடை  பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 40 வயது உடையவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (04) அதிகாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூவரில் இருவர் வைத்தியசாலையில் இருந்து சொந்த விருப்பத்தில் வைத்தியசாலை தரப்பினருக்கு தகவல் வழங்காமல் சென்றுள்ளதாகவும் வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.

இதே வேளை குறித்த மோதல் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 47 வயதுடையவர்களை கைது செய்துள்ளதாக சீனக்குடா பொலிசார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சீனக்குடா பொலிசார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...