கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றத் தடுப்பு நடவடிக்கைக்கு அமைய பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 06 பேர் நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பதிவான, கூரிய ஆயுதங்களால் நபர்களை தாக்குதல் மேற்கொண்டு வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மோட்டார் சைக்கிள்களை களவாடுதல், பணம் கொள்ளையடித்தல், வாகனங்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 6 சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் 21, 24, 29, 32 வயதுகளையுடைய அக்கராயன்குளம் மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்றையதினம் (04) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Add new comment