மேர்கன்டைல் ஹொக்கி தொடர் டிசம்பர் 4 இல்

44ஆவது மேர்கன்டைல் ஹொக்கி தொடர் எதிர்வரும் 4ஆம் திகதி கொழும்பு பீ. சரா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

அணிக்கு ஏழு பேர் கொண்ட இந்தத் தொடருக்கு நிப்பொன் பெயின்ட்ஸ் நிறுவனம் பிரதான அனுசரணை வழங்குவதோடு பிரவுன்ஸ் நிறுவனம், பரகா ஜொயின்ட் ஈஸ் ஸ்ப்ரே மற்றும் கொழும்பு ஹில்டன் ஹோட்டல் இணை அனுசரணை வழங்குகின்றன.

இது பற்றி அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு கடந்த செவ்வாயன்று (29) பி.ஆர்.சி மைதானத்தில் நடைபெற்றது. 22 அணிகள் பங்கேற்கும் இம்முறை தொடர் டிசம்பர் 4 ஆம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 4.30க்கு இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.


Add new comment

Or log in with...