உலகின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு

உலகில் வெடிக்கக்கூடிய நிலையில் இருக்கும் மிகப்பெரிய எரிமலை 40 ஆண்டுகளில் முதல்முறையாகக் குமுறியுள்ளது.

ஹவாயியின் மாவ்னா லோவா எரிமலையில் பல ஆண்டுகளாகவே அழுத்தம் அதிகரித்து வந்ததாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு முன் எரிமலை வெடிக்க ஆரம்பித்தது. வெடிப்புப் பகுதிக்குக் கீழ் வசிக்கும் மக்களுக்குத் தற்போது ஆபத்து ஏதும் இல்லை என்று அமைப்பு குறிப்பிட்டது.

ஆனால் எரிமலை வெடிப்பு மோசமாகலாம் என்று அது எச்சரித்தது. தற்போது மக்களை வெளியேற்றும் உத்தரவுகள் ஏதும் விடுக்கப்படவில்லை.

அந்த எரிமலை 1984ஆம் ஆண்டுக்குப் பின்னர் வெடித்ததில்லை. மாவ்னா லோவா என்றால் நீளமான மலை என்று அர்த்தம்.

ஹவாயியில் உள்ள மற்ற தீவுகளைச் சேர்த்தாலும் அதை விட மாவ்னா லோவா பெரியது. அது 1843ஆம் ஆண்டு முதல் 33 முறை வெடித்துள்ளது.


Add new comment

Or log in with...