Wednesday, November 30, 2022 - 6:12pm
அக்கரைப்பற்று சா ஸ்போர்ட்ஸின் ஐந்தாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘சா சம்பியன் கிண்ண’ கிரிக்கெட் சுற்றுப்போட்டித் தொடரில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டு கழகம் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.
அம்பாறை மாவட்டத்திலுள்ள 16 முன்னனி விளையாட்டு கழகங்கள் பங்கு கொண்ட இந்தத் தொடரின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (27) அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் பள்ளிக்குடியிருப்பு றஹிமீயா அணியையே சோபர் கழகம் தோற்கடித்தது. தொடரின் ஆட்ட நாயகனாகவும் இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் சோபர் அணியின் ஜெஸீல் தெரிவு செய்யப்பட்டார்.
அக்கரைப்பற்று வடக்கு தினகரன் நிருபர்
Add new comment