கிளிநொச்சி காட்டுப்பகுதியில் மறைத்து வைத்த 41 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

கிளிநொச்சி, சுண்டுக்குளம் கடற்கரை பகுதியிலுள்ள களப்பு எனும் காட்டுப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 41.5 கிலோ கேரள கஞ்சா இராணுவத்தினரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இரகசிய தகவலுக்கமைய இராணுவத்தினர் சிறப்பு அதிரடி படையினருக்கு வழங்கிய தகவலுக்கமைய நேற்று (29)

அதிகாலை மறைத்து வைக்கப்பட்டிருந்த 41 கிலோ 500 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படவில்லை தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் தடயப் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்-.

 

பரந்தன் குறூப் நிருபர்


Add new comment

Or log in with...