கவியரசி எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமாவின் சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது

கவியரசி எஸ்.ஏ.இஸ்மத் பாத்திமாவின் 'பறக்கத் தெரியாத பறவைகள்'சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

புத்தசாசன,சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் என்பன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த பிரதேச செயலக மட்டம் மற்றும் மாவட்ட செயலக மட்டத்திலும் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டித் தொடரில் வெற்றியாளர்களுக்கிடையே தேசிய மட்டத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்காக 2022ஆம் ஆண்டிற்கான தேசிய இலக்கிய விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் நடைபெற்றது.

இதன் போது சிறுவர் கதையாக்கப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற கவியரசி செய்யது அஹமது இஸ்மத் பாத்திமாவின் 'பறக்கத் தெரியாத பறவைகள் 'சிறுவர் கதையாக்கத்திற்கு தேசிய விருதாக தங்கப்பதக்கத்தையும், ரூபா பத்தாயிரம் காசோலையையும், சான்றிதழையும் அதிதியாகக் கலந்து கொண்ட பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர வழங்கி கௌரவித்தார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினரும்,புத்தசாசன,மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சருமான விதுர விக்கிரமநாயக்க மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் தரணி அனோஜா கமகே ஆகியோரும் பங்கேற்றனர். கவியரசி செய்யது அஹமது இஸ்மத் பாத்திமா மேல் மாகாணம் பஸ்யால மினுவங்கொட எல்லமுல்ல ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலய அதிபராவார்.

பி.எம்.எம்.ஏ. காதர்...

(மருதமுனை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...