களுவாஞ்சிகுடி மெக்ஸ் வெற்றி

 

குறுமன்வெளி ரொபின் விளையாட்டுக் கழகம் நடாத்திய 9 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் சம்பியன்சிப் சுற்றுப் போட்டியில் களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்கனாக தெரிவுசெய்யப்பட்டது. இக் கழகம் இவ்வருடம் பெற்றுக் கொண்ட 13ஆவது கிண்ணம் இதுவாகும்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இன்டிபென்டன் விளையாட்டுக் கழகம் 4.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளை இழந்து 8 ஓட்டங்களையே பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய களுவாஞ்சிகுடி மெக்ஸ் விளையாட்டுக் கழகம் 3.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 13 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

 

மாளிகைக்காடு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...