Tuesday, November 29, 2022 - 5:18pm
சீதுவ ஒன்ரீச், ஹோட்டலில் நடைபெற்ற மிஸ்டர் நோவிஸ் உடல் கட்டழகர் சம்பியன்சிப் போட்டியில் லேக் ஹவுஸ் விளையாட்டு கழகத்தின் எல்.பீ.ஐ. உதய 75 கிலோகிராம் எடைப்பிரிவில் 3ஆம் இடத்தைப் பிடித்தார்.
லேக்ஹவுஸ் கணக்குப் பிரிவில் பணியாற்றும் உதயவின் இந்த வெற்றி உடல் கட்டழகர் போட்டியில் லேக்ஹவுஸ் ஊழியர் ஒருவர் பெற்ற சிறந்த வெற்றியாக பதிவானது. நாட்டின் மிகப்பெரிய உடல்கட்டழகர் போட்டியாக ஆண்டு தோறும் நடத்தப்படும் மிஸ்டர் நோவிஸ் போட்டியில் முதல் முறை 200க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டிகள் கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட பிரிவுகள் என இரு பிரதான பிரிவுகளில் நடைபெற்றன.
Add new comment