இழப்பு மற்றும் சேதங்கள் நிதிய உடன்படிக்கைக்கு இந்தியா வரவேற்பு

எகிப்தில் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில், இழப்பு மற்றும் சேதங்கள் தொடர்பான நிதியத்தை ஸ்தாபிக்கவென உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையை இந்தியா வரவேற்றுள்ளது.

'இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க உடன்படிக்கை' எனவும் 'இதற்காக உலகம் நீண்ட காலம் காத்திருந்தது' என்றும் இந்தியாவின் சுற்றாடல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், காலநிலை மாற்றத்திற்கு முகம் கொடுப்பதற்கான உலகளாவிய ஏற்பாடுகளையும் முயற்சிகளையும் இந்தியா பெரிதும் பாராட்டுகின்றது. அதேநேரம் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தவிர்ப்பதற்கான எமது முயற்சிகளில் நிலைபேறான வாழ்க்கை முறைமை, நுகர்வு மற்றும் உற்பத்தி முறைமைகளுக்கு மாறுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

காலநிலைச் செயற்பாடு, விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு என்பன தொடர்பில் நான்கு ஆண்டு வேலைத்திட்டமொன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். ஏனெனில் காலநிலை மாற்றத்தின் விளைவாக மில்லியன் கணக்கான சிறு விவசாயிகளின் வாழ்வாதாரமான விவசாயம் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்கள் பாதிக்கப்படுவதைக் குறைப்பதற்கான பொறுப்பை நாம் கொண்டுள்ளோம். அதனை அடிப்படையாகக் கொண்டு மாற்றத்திற்கான வேலைத்திட்டமொன்றை இந்தியா தயாரித்துள்ளது. என்றாலும் காலநிலை தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அபிவிருத்தி அடைந்த நாடுகள் உலகளாவிய மாற்றத்தின் முக்கிய பகுதியினராக இருப்பதை மறந்துவிட முடியாது என்றுள்ளார்.


Add new comment

Or log in with...