முத்து சிவலிங்கத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பு

இ.தொ.காவின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கத்தின் இறுதிக் கிரியைக்கு நேரடியாக வருகை தந்து அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோர் இரங்கல் கடிதத்தை அனுப்பி வைத்ததுடன், தொலைபேசி ஊடாகவும் இரங்கலை பகிர்ந்துக் கொண்டனர்.

அன்னாரின் குடும்பத்தினருக்கும் இ.தொ.கா.விற்கும்  இரங்கலை பகிர்ந்துக் கொண்ட அனைவருக்கும் இ.தொ.கா சார்பாக மனமார்ந்த  நன்றிகளை அவர் தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...