மறைந்த இ.தொ.காவின் முன்னாள் தலைவரும்,போசகருமான முத்துசிவலிங்கத்தின் நுவரெலியா இல்லத்திற்கு கொழும்பிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் வினோத் கே. ஜேக்கப் மற்றும் கண்டி இந்திய துணை தூதரகத்தின் துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் ஆதிரா ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், இந்தியா அரசின் இரங்கல் செய்தியையும் இரங்கல் புத்தகத்தில் பதிவு செய்தனர்.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் ,பிரதி தவிசாளர் ராஜதுரை,பிரதி தலைவி அனுசியா,பிரதி தலைவர் கணபதி கனகராஜ், தேசிய அமைப்பாளர் சக்திவேல் மற்றும் உப தலைவர் பிலிப் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
Add new comment