சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி அவற்றை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று இன்று (02) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சம்பளப் பிரச்சினை, ஓய்வூதியம், பதவி உயர்வு நடைமுறைகள், நிரந்தர நியமனம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பான பல யோசனைகளும் முன்வைக்கப்பட்டன.
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்தி அவற்றை தீர்க்க துரித நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சூரியாரச்சி மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, சமுர்த்தி திணைக்களம் உள்ளிட்ட துறைசார் நிறுவன சிரேஷ்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
Add new comment