முப்படையிலிருந்து உரிய முறையில் விலக பொதுமன்னிப்பு காலம்

சட்டரீதியாக விலகமால் முப்படைகளிலிருந்து சென்ற படை வீரர்கள், சேவையிலிருந்து சட்ட ரீதியாக விலக பொது மன்னிப்பு காலத்தை, பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த வகையில் 2022 ஒக்டோபர் 25 அல்லது அதற்கு முன் சேவையிலிருந்து சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் இவ்வாறு சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்ள முடியுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, 2022 நவம்பர் 15ஆம் திகதி முதல் 2022 டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலத்தை பொது மன்னிப்பு காலமாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, மீள செலுத்த வேண்டிய ஏதேனும் தொகை நிலுவையில் இருப்பவர்கள் மாத்திரம் வெளியேற்றுவதற்கு முன்னர் அதனை செலுத்த வேண்டுமெனவும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...