Friday, October 28, 2022 - 5:28pm
- மலையக புகையிரத போக்குவரத்து பாதிப்பு
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த '1008' எனும் இலக்கமுடைய கடுகதி புகையிரதம், ஹட்டன் - ரொசல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலையக புகையிரத பாதையில் புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இன்று மு.ப. 10.15 மணிக்கு பதுளையிலிருந்து புறப்பட்ட குறித்த புகையிரதத்தின் பார்வையாளர் புகையிரத பெட்டியே இவ்வாறு தடம்விலகியுள்ளதாக கட்டுப்பாட்டு அறை குறிப்பிட்டுள்ளது.
Add new comment