தீபாவளியையிட்டு ஒரு சில பிரதேசங்களில் மதுபான விற்பனை நிலையங்கள் பூட்டு

தீபாவளி பண்டிகையையிட்டு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் நாளை (24) மூடப்படுமென கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் மஹியங்கணை, ரிதீமாலியத்த பிரதேச செயலாளர் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் உள்ள விற்பனை நிலையங்களும் மூடப்படுமென பிரதி கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.

குறித்த பிரதேசங்களின் பிரதேச செயலாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற வேண்டுகோளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தீபாவளியை முன்னிட்டு நாளையதினம் (24) மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...