சர்வதேச கிரிக்கெட் பேரவை தரப்படுத்தல்

சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸிலின் ரி20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் வணிந்து ஹசரங்க மீண்டும் மூன்றாம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

தென்னாபிரிக்க வீரர் டெப்ரைஷ் சம்ஷி 2 இடங்கள் பின்தள்ளி 5ஆவது இடத்தை பிடித்துள்ள காரணத்தால் வணிந்து ஹஸரங்க 3ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியாவின் அடம் ஷாம்பா 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதில் வணிந்து ஹஸரங்க 692 புள்ளிகளை பெற்றுள்ளதுடன், இரண்டாவது இடத்தில் உள்ள ரஷீட் கானை (696) விட நான்கு புள்ளிகள் குறைவாக உள்ளார். டி20 பந்துவீச்சாளர்கள் வரிசையில் அவுஸ்திரேலியாவின் ஜோஷ் ஹெஷல்வூட் முதலிடத்தை தக்கவைத்துள்ளதுடன், சகலதுறை வீரர்கள் வரிசையில் மொஹமட் நபி முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

துடுப்பாட்ட வரிசையில் பதும் நிஸ்ஸங்க 8ஆவது இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளதுடன், பந்துவீச்சாளர்கள் வரிசையில் மஹீஷ் தீக்ஷன 7ஆவது இடத்தையும், சகலதுறை வீரர்கள் வரிசையில் வணிந்து ஹஸரங்க 4ஆவது இடத்தையும் தக்கத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் அரைச்சதம் கடந்திருந்த இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், டி20 துடுப்பாட்ட தரவரிசையில் முதலிடத்தை நெருங்கியுள்ளார்.

துடுப்பாட்ட வரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்த அவர், பாகிஸ்தான் வீரர் மொஹமட் ரிஸ்வானின் முதலிடத்தையும் நெருங்கியுள்ளார். மொஹமட் ரிஸ்வான் முதலிடத்தில் 854 புள்ளிகளுடன் உள்ளதுடன், சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளை பெற்று, வெறும் 16 புள்ளிகள் இடைவெளியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.


Add new comment

Or log in with...