மைத்திரி தாக்கல் செய்த மனு நேற்று ஒத்திவைப்பு ஒக்டோபர் 10 இல் விசாரணை

 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தனக்கு எதிரான நீதவான் விசாரணை மற்றும் அழைப்பாணை விடுக்கப்பட்டதை சவாலுக்கு உட்படுத்தி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று (06) வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இதன்படி, இந்த மனுவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக நீதியரசர்கள் அறிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெறவுள்ளதாக தகவல் கிடைத்தும் அதனை தடுக்க தவறியமை தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தேக நபராக பெயரிட்டு எதிர்வரும் (14) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பாணையை இரத்துச் செய்யுமாறு கோரி, ரிட்மனுவை மைத்திரி தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...