சுற்றுலா பயணிகளுக்கு விசேட அனுமதிப்பத்திரம்

நேற்று முதல் திட்டம் ஆரம்பம் − அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ

 

சுற்றுலாத் துறையை முன்னேற்றுவது தொடர்பில் கருத்துக்களை முன்வைப்போரே மறுபுறம் அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை  திட்டமிட்டு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எந்த தரப்பினரும் குழப்பாவிட்டால் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் எதிர்பார்க்கும் எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைக்க முடியும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடை க்கான வினாக்கள் வேளையில் சம்பத் அத்துகோரள எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப்பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்:

சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் நாட்டுக்கு வரவழைக்க வேண்டும் என கூறுவோரே மறுபுரம் பாராளுமன்றத்தை முற்றுகையிடும் நடவடிக்கைகளிலும், நாட்டில் மக்களுக்கு உணவில்லை, பாராளுமன்றம் இல்லை எரிபொருள் இல்லை, என வெளிநாடுகளில் திட்டமிட்ட பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...