இலங்கை ஊடகவியலாளர்கள் இந்தியாவுக்கு நட்புறவு பயணம்

இந்தியாவுக்கு நட்புறவு விஜயம் ஒன்றை மேற்கொண்ட சீஷெல் மற்றும் இலங்கை ஊடகவியலாளர்கள் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்திராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் அண்டை நாடுகளுடனான நெருக்கமான உறவுக்கான மற்றொரு படியாக இந்த சந்திப்பு இடம்பெற்றது என்று இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா மற்றும் சீஷெல் ஊடகவியலாளர்கள் ஒருவார நட்புறவு பயணமாகவே இந்தியா சென்றுள்ளனர்.


Add new comment

Or log in with...