ஈக்வடோர் சிறை மோதல்; 15 கைதிகள் உயிரிழப்பு

ஈக்வடோரின் மிகப்பெரிய சிறைகளில் ஒன்றான லடகுன்காவில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 15 கைதிகள் உயிரிழந்துள்ளனர். கைதிகள் துப்பாக்கி மற்றும் கத்திகளால் சண்டையிட்டதாகவும் தொடர்ந்து சிறை காவலர்கள் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தேசிய கைதிகள் நிறுவனம் குறிப்பிட்டது.

ஈக்வடோர் சிறையில் போதைக்கடத்தல் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் அண்மைக் காலத்தில் அதிகரித்துள்ளன. 2020 தொடக்கம் இவ்வாறான மோதல்களில் 400க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக ஈ.எப்.ஈ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...