சம்பியனானது மியண்டாட் விளையாட்டுக் கழக அணி

சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழகத்தின் மர்ஹும் எப்.எம். றஜாத் ஞாபகார்த்த கிரிக்கெட் வெற்றிக் கிண்ண போட்டியில் சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக் கழகத்தினர் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டனர்.

அட்டாளைச்சேனை அஷ்ரஃப் பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) அட்டாளைச்சேனை பிரண்ஸ் விளையாட்டுக் கழகத்துடன் இடம்பெற்ற போட்டியில் சாய்ந்தமருது மியண்டாட் விளையாட்டுக்கழகத்தினர் வெற்றி பெற்றனர். போட்டியின் சிறப்பாட்டக்காரராக மியண்டாட் விளையாட்டுக் கழகத்தின் யூ.எல்.எம். ஆசிக் தெரிவானார்.

சாய்ந்தமருது மியன்டாட் கழகத்தின் செயலாளர் யூ.கே. ஜவாஹிர் தலைமையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்வில், கழகத்தின் தவிசாளர் ஜே.எம். காலித், உப தலைவர் யூ.எல்.எம். பாஹிம், ஆலோசனை சபைத் தலைவர் எஸ்.எம். அமீர், தெரிவுக் குழு தலைவர் எம்.ஏ. ஜனுௗஸர் உட்பட் பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை மத்திய, அக்கரைப்பற்று வடக்கு, ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்கள்


Add new comment

Or log in with...