விமானத்தை தவறவிட்டதால் ஹெட்மியருக்கு இடமில்லை

அவுஸ்திரேலியாவுக்கான விமானத்தை தவறவிட்டதால் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து துடுப்பாட்ட வீரர் ஷிம்ரோன் ஹெட்மியர் நீக்கப்பட்டுள்ளார்.

ஹெட்மியருக்கான விமானத்தை குடும்ப காரணத்தால் சனிக்கிழமையில் இருந்து திங்கட்கிழமைக்கு மாற்றியபோதும் அந்த விமானத்தை பிடிக்கவும் அவரால் முடியாமல்போயுள்ளது. இதனால் 25 வயது ஹெட்மியருக்கு பதில் ஷமர் புருக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

“இந்த மிக முக்கியமான உலக போட்டிக்கான தயார்படுத்தலுக்கு அணியின் திறனில் சமரசம் செய்ய நாம் தயாரில்லை” என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் பணிப்பாளர் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...