இலங்கைக்கு மேலும் 2.74 மில். டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்கள்

இலங்கை மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் வகையில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட Hope Worldwide அமைப்பினால் 2.74 மில்லியன் டொலர் பெறுமதியான மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாக, இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

அதற்கமைய கடந்த வாரத்தில் அமெரிக்க நிறுவனங்களால் வழங்கப்பட்ட மொத்த மருத்துவ உதவிகளின் பெறுமதி 12 மில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாக, தூதரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள ட்விட்டர் பதிவு வருமாறு...


Add new comment

Or log in with...