இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மன்னார் விஜயம்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை (3) மாலை  மன்னாருக்கு விஜயம் செய்துள்ளார். மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து  மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் அ.ஸ்ரான்லி டி மேலுடன் விசேட கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட நிலவரம் தொடர்பாக அரசாங்க அதிபரினால் விளக்கமளிக்கப்பட்டதுடன் அரசாங்கத்தினால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் மாவட்ட மக்களுக்கு தேவைப்பாடாக உள்ள விடயங்கள் தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்தோடு மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல், நிலையான வாழ்வாதார வழிவகைகள் மற்றும் கிராம மட்ட உட்கட்டமைப்பு  விடயங்கள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடியுள்ளதுடன், தூதுவரை கௌரவிக்கும் முகமாக மாவட்ட அரசாங்க அதிபரினால் நினைவுப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  இச்சந்திப்பில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதம உள்ளக கணக்காய்வாளர் மூவரும்  கலந்துகொண்டிருந்தனர்.

மன்னார் குறூப் நிருபர்

 


Add new comment

Or log in with...