பொருளாதார நெருக்கடி தீர்வுக்கு முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக உருவாக்குவது அவசியம்

அமைச்சர் நசீர் அகமட் சபையில் தெரிவிப்பு 

முழு நாட்டையும் முதலீட்டு வலயமாக உருவாக்கி முதலீட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டியது நாட்டின் தற்போதைய தேவையாக உள்ளது என அமைச்சர் நஸீர் அகமட் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

நாட்டின் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தந்திரோபாய முதலீட்டு நடவடிக்கைகள் அவசியமாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற நிதியமைச்சின் வரி சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,   ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் முதலீடுகளின் மூலம் குறைந்த வருமானத்தையே ஈட்டி வருகின்றோம்.

மலேசியா பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட முதலீடுகளில் முன்னிலை வகிக்கின்றன. உலகளாவிய வலைப் பின்னலின் ஒரு பாகமாக மலேசியா மாறியுள்ளது. முதலீடுகளிலும் பொருளாதாரத்திலும் அது வெகுவாக முன்னேறியுள்ளது. 

போட்டித் தன்மையுடனான முதலீடுகள் அவசியம். கவர்ச்சியான வரிச்சலுகைகளை வழங்குவதும் முதலீடுகளை ஊக்குவிக்க உறுதுணையாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

லோரன்ஸ் செல்வநாயகம் 

 


Add new comment

Or log in with...